தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளா: இடைத்தேர்தலில் காங்கிரஸின் சாண்டி உம்மன் மாபெரும் வெற்றி

3 mins read
d4bceebf-0d1f-43c7-9aa3-f52805b0fa65
கேரளாவின் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன். - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற உம்மன் சாண்டி தொகுதியான புதுப்பள்ளியில் நடந்த இடைத் தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 5ஆம் தேதி கேரளா, திரிபுரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. கேரளாவின் புதுப்பள்ளித் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 10 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சாண்டி உம்மன் அதிகமான வாக்குவித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரசின் சாண்டி உம்மன் 78,098 வாக்குகள் பெற்று 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். 41,644 வாக்குகளுடன் சி.பி.எம். கட்சி 2வது இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3வது இடமும் பிடித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜேக் சி தாமஸ், பாஜக சார்பில் லிகின்லால் ஆகியோர் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் தொடர்ந்து 50 ஆண்டுகளாக தன் வசமிருந்த இந்தத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி கடந்த ஜூலை 18ஆம் தேதி காலமானாா். கேரளத்தில் புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் 53 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவா், இரு முறை கேரள முதல்வராக பதவி வகித்துள்ளாா்.

தும்ரி (ஜார்க்கண்ட்) ஜேம்எம்எம் கட்சி வெற்றி

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்ரி தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஜேஎம்எம் கட்சி வேட்பாளர் பெபி தேவி, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏஜேஎஸ்யு கட்சி வேட்பாளர் யசோதா தேவியை 17,000க்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்தக் கட்சி இண்டியா கூட்டணியைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

துப்குரி (மேற்கு வங்கம்) - திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி துப்குரி தொகுதியில் வென்றுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பேராசிரியர் நிர்மல் சந்திரா ராய், பாஜக வேட்பாளர் தப்பாசி ராயைக் காட்டிலும் 4,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கோஷி (உத்தரப் பிரதேசம்) - சமாஜ்வாடி முன்னிலை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோஷி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி, அதையெடுத்துப் போட்டியிட்ட பாஜகவை பின்னுக்குத் தள்ளி பெரும்பாலான வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதாக நேற்று இரவு 7 மணி நிலவரப்படி அறிவிக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த சமாஜ்வாடி கட்சியின் தாரா சிங் சவுஹான் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜகவில் இணைந்த அவர் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

தன்பூர், போக்சாநகர் (திரிபுரா) - பாஜக வெற்றி

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் தன்பூர், போக்சாநகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை உறுதிசெய்துள்ளது.பாஜக சார்பில் போக்சாநகரில் தஃபஜ்ஜல் ஹுசைனும், தன்பூரில் பிந்து டெப்நாத்தும் போட்டியிட்டனர்.

பாகேஸ்வரம் (உத்தராகண்ட்) - பாஜக வெற்றி

உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜகவின் கோட்டை என்று கூறப்படும் பாகேஸ்வரத்தில் காங்கிரஸ் கட்சியைவிட 2,404 வாக்குகள் அதிகம் பெற்று பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பார்வதி தாஸ் 33,247 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பசந்த் குமார் 30,842 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி துர்காபுரி தொகுதியில் வென்றுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பேராசிரியர் நிர்மல் சந்திரா ராய், பாஜக வேட்பாளர் தப்பாசி ராயைக் காட்டிலும் 4,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்