தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜி20 தலைவர்களுக்கு தங்கத் தட்டில் 500 வகை உணவுகள்

1 mins read
dcbc982b-befa-4bb9-ab5a-d4b0b6683e14
ஜி20 தலைவர்களுக்கு தங்கத் தட்டில் 500 வகை உணவுகள் வழங்கப்படுகின்றன. அவற்றின் சுவைத் தரத்தை உறுதிப்படுத்த தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியா ஜி20 உச்சநிலை மாநாட்டை தலைமை ஏற்று நடத்துகிறது.

மாநாடு நடக்கும் தலைநகர் புதுடெல்லியில் பள்ளிக்கூடங்கள் நான்கு நாள்கள் மூடப்பட்டு உள்ளன. வாகனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. 5,000 படச் சாதனங்கள் கண்காணித்து வருகின்றன.

நகரம் முழுவதும் சாலைச் சந்திப்புகள், சாலையோர கட்டடங்கள் அனைத்தும் அழகுப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புக்காக 200,000 பேர் கொண்ட பாதுகாப்புப் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குற்றங்களைத் தடுப்பதற்காக இயந்திர மனிதத் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களுக்காக 500 வகை உணவுகள் தயாராயின. உணவுகள் தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தட்டு உள்ளிட்ட பாத்திரங்களில் வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்