தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜி20 தலைவர்கள்கூட்டறிக்கைக்கு ஒப்புதல்

1 mins read
1b0648aa-be86-413f-8651-340197de1fd1
கூட்டறிக்கை தொடர்பில் கருத்திணக்கம் எட்டப்பட்டதை அறிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. - படம்: ராய்ட்டர்ஸ்

அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்த கூட்டறிக்கையை ஜி20 ஏற்றுக்கொண்டது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நடைபெற்ற உச்சநிலை மாநாட்டின் ஒரு சந்திப்பில் அறிவித்தார்.

உக்ரேன் போர் தொடர்பான பத்தியில் வரும் வாசகங்கள் குறித்து உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு இணக்கம் ஏற்பட்டுள்ளதை அது குறிக்கிறது.

ஜி20 உச்சநிலை மாநாட்டில் ஏற்பட்டுள்ள இத்தகைய இணக்கம் இந்தியத் தலைமைத்துவத்திற்கு மகுடம் சூட்டியுள்ளது. அத்துடன், 21வது உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியத்தை இணைத்த பெருமையும் இந்தியாவைச் சேர்கிறது.

குறிப்புச் சொற்கள்