தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரா்

1 mins read
3232657b-f29f-48e9-ad78-2af7aff6cf92
lபுதுடில்லியில் அனைத்துலக ஊடக மையத்தில் வைக்கப்பட்டுள்ள பெரிய திரையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கும் காட்சி. - படம்: இபிஏ

ஜி20 உச்சநிலை மாநாட்டையொட்டி இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபா் ஜோ பைடன், டில்லியில் உள்ள பிரதமா் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மோடியின் அரசு இல்லத்தில் வெள்ளிக்கிழமை அன்று இருவரும் 52 நிமிடங்கள் பேசினர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளினல் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் என பதிவிட்டுள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டுறவை ஆழமாக்க இருநாடுகளும் தீா்மானித்துள்ளன.

அதைத் தொடர்ந்து, 2024ல் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரரை அனுப்புவதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ளும் வழிமுறைகள், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி குறித்த பேச்சுவாா்த்தையை இஸ்ரோவும், நாசாவும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா நிச்சயம் ஆதரவளிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்