தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குமாரசாமி: கூட்டணி குறித்து எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து

1 mins read
61d72001-7857-4dcb-919b-5e5e4b564304
மஜத முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குமாரசாமி. - படம்: ஊடகம்

பெங்களூரு: பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்டக் கருத்தாகும். பாஜகவுடன் தொகுதிப் பங்கீடுதொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மஜத முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நாங்கள் இரண்டு, மூன்று முறை பாஜக தலைவர்களை சந்தித்துள்ளோம். அந்தச் சந்திப்புகள் மரியாதை நிமித்தம் நடந்த சந்திப்புகளே. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே கூட்டணி பற்றி இப்போது எதுவும் கருத்துக்கூற முடியாது என்று குமாரசாமி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்