ஜி20: துருக்கி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் முதல் பெண்மணிகளுக்கு சிறப்பு விருந்து

ஜி20: துருக்கி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் முதல் பெண்மணிகளுக்கு சிறப்பு விருந்து

1 mins read
da32dc5a-b344-4589-90a8-2fa0426d08db
ஜி20 மாநாட்டில் இந்திய கலாசாரம் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிடும் உலகத் தலைவர்களின் மனைவியர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: புதுடெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களின் மனைவியர்க்கு, இந்திய கலாசார அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், அவர்களுக்குச் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. ஜெய்ப்பூர் இல்லத்தில் அளிக்கப்பட்ட அந்த சிறப்பு விருந்தில் தினை உணவுகள் வழங்கப்பட்டதாகவும், தெருவில் விற்கப்படும் சில உணவுகளை அவர்கள் ருசி பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சிறப்பு விருந்தில் துருக்கி, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மொரீசியஸ் நாட்டின் முதல் பெண்மணிகள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்