மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் ஏழு பேர் மரணம்

மின்தூக்கி அறுந்து விழுந்த விபத்தில் ஏழு பேர் மரணம்

1 mins read
11a3628d-58c5-4310-bcb3-508828ce2b21
படம்: - தமிழ்முரசு

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கம் பகுதியில் அண்மையில் 40 மாடி கட்டடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அந்தக் கட்டடத்தின் மேற்கூரையில் சில பணிகள் நடைபெற்றன.

பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் மின்தூக்கி கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது அந்த மின்தூக்கி அறுந்து கீழே விழுந்தது.

இதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தகவலறிந்த காவல்துறை, தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்