இந்தியத் தலைவர்களைச் சந்தித்த சவூதி அரேபிய பட்டத்து இளவரசர்

இந்தியத் தலைவர்களைச் சந்தித்த சவூதி அரேபிய பட்டத்து இளவரசர்

படம்: இபிஏ

11 Sep 2023 - 7:23 pm

1 mins read

புதுடெல்லி: டெல்லி அதிபர் மாளிகையில் திங்கட்கிழமை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர்,பிரதமரான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் கலந்து கொண்டார்.

அவர் அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சில இந்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வழங்கப்பட்டது.

டெல்லியில் பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 9,10 ஆகிய தினங்களில் ஜி 20 மாநாடு நடந்தது.

இதில் 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான, கப்பல் மற்றும் ரயில் இணைப்பு வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற ஒரு பெரிய வரலாற்று ஒப்பந்தம் பற்றி இந்தியா, அமெரிக்கா, சவூதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டணி திட்டம் தொடங்கப்பட்டது. மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் உள்ளிட்டோர் பேசினர்.

குறிப்புச் சொற்கள்
அரசியல்