நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனைவியைக் கொன்று வீட்டில் 10 மணி நேரம் பதுங்கியிருந்த 62 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
நித்தின் நாத் சிங்கின் மனைவி ரேணு சிங். ஞாயிற்றுக்கிழமை காலை ரேணு சிங்கை நித்தின் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ரேணுவின் சகோதரர் மாலை வீட்டுக்குச் சென்றபோது, ரேணு மாண்டுகிடந்ததை அவர் கண்டார். அதன் பின்னர் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. ஆரம்பகட்ட விசாரணையில் நித்தின் கொலைசெய்தது உறுதியானதால் அவர் கைதுசெய்யப்பட்டார்.