ஹைதராபாத்: கடைக்குப் பிரியாணி சாப்பிடச் சென்றவர்கள் பிரியாணி சரியில்லை என்று கூறினர். கடை ஊழியர்கள் சேர்ந்துகொண்டு அவர்களை அடித்தனர். அதில் ஒருவர் மாண்டார்.
இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் தராபாத், பஞ்சகுட்டா அருகே நிகழ்ந்தது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர் தன் நண்பர்களுடன் திங்கட்கிழமை நள்ளிரவில் ஒருகடைக்குச் சாப்பிடச் சென்று கடையில் பிரியாணி வேண்டும் என்று கூறினர்.
பிரியாணியை ஒரு வாய் சாப்பிட்ட உடனேயே லியாகத் அலியும் அவரது நண்பர்களும் பிரியாணியின் சுவை சரியில்லை என உணவக ஊழியரிடம் தெரிவித்தனர்.
இதனால் உணவக ஊழியருக்கும் லியாகத் அலியின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உணவக ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.
உணவகத்தின் கதவைச் சாத்தினர். ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்துகொண்டு லியாகத் அலியையும் அவரின் நண்பர்களையும் தாக்கினர்.
அடித்து துவைத்து வெளியே தூக்கிப் போட்டனர். படுகாயம் அடைந்த லியாகத் அலி மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே மரணமடைந்தார்.
அவரின் நண்பர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து உணவகத்தின் ஊழியர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவித்தன. இதில் சம்பந்தப்பட்ட கடையின் பெயர் உள்ளிட்ட இதர விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

