பாலியல் வன்கொடுமை:61 ஆண்டுகள் சிறை

1 mins read
b9e9ab11-f498-4df4-8098-258c7ef203d0
ஒப்பந்ததாரராக பணிபுரிந்த ராஜீவ் என்பவர், ஒரு சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. - படம்: தமிழக ஊடகம்

திருவனந்தபுரம்: மேற்குவங்காளம், நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ், 28, என்பவர், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதானார். இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர் ராஜீவுக்கு 16 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்காக 25 ஆண்டுகள்;

கடுமையான பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு 25 ஆண்டுகள்;

மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகள்;

வெளிப்படையான பாலுறவு, உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகள்;

கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டுகள் என மொத்தம் 61 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

சிறைத் தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜீவுக்கு ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்தார்.

குறிப்புச் சொற்கள்