மும்பை: சனாதன தர்மம் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் மிரா சாலையில் வசிக்கும் நாக்நாத் காம்ப்ளி என்ற தனியார் நிறுவன ஊழியர், உதயநிதிக்கு எதிராகக் கொடுத்த புகாரின் பேரில் மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A, 295A ஆகியவற்றின் கீழ் உதயநிதிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இச்சட்டத்தில் இடம் உண்டு.
அமைச்சர் உதயநிதியின் பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதாக உத்தரப் பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

