தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய மாணவியின் மரணம் குறித்து பரிகாசம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் இந்தியா

2 mins read
ae713ff2-b441-4e46-b6fe-81079b89684e
காவல்துறை வாகனம் மோதியதில் மரணம் அடைந்த ஜானவி கன்டுலா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்காவின் சியாட்டல் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவி ஜானவி கன்டுலா மாண்டார். அவர் சாலையைக் கடந்தபோது காவல்துறை வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் அவர் தூக்கி எறியப்பட்டார்.

இந்த விபத்து ஜானவியின் பல்கலைக்கழகத்துக்கு அருகில் நிகழ்ந்தது.

விபத்து குறித்து மற்ற அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த காவல்துறை அதிகாரி, அதுகுறித்து பரிகாசம் செய்தது அவர் சீருடையில் அணிந்திருந்த கேமராவில் பதிவானது.

ஜானவியின் மரணம் பற்றி தகவல் அறிந்ததும் அமெரிக்கக் காவல்துறை அதிகாரியான 23 வயது டேனியல் ஆட்ரி சிரித்து, மாணவியின் உயிர் அவ்வளவு முக்கியமானதல்ல என்றும் இழப்பீடாக சியாட்டல் நகரம் பணம் தந்தால் போதும் என்றும் அலட்சியமாக் கருத்து தெரிவித்தது கேமராவில் பதிவானது.

இந்த ஒலிப்பதிவை சியாட்டல் காவல்துறை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரி டேனியல் ஆட்ரியின் கருத்துகள் முகம் சுளிக்க வைப்பதாக இருக்கவே அதை மேல் அதிகாரியின் கவனத்துக்கு அவர் கொண்டு சென்றார்.

இதற்கிடையே, மாணவி ஜானவியின் மரணம் குறித்து அமெரிக்கக் காவல்துறை அதிகாரி பரிகாசம் செய்தது குறித்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஜானவியின் மரணம், விபத்து குறித்து அமெரிக்கா விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த மாணவியின் மரணம் குறித்து பரிகாசம் செய்த அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜீத் சிங் சந்து, இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசாங்கத்திடம் புகார் செய்ததை அடுத்து அமெரிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜானவியின் உயிரைப் பறித்த விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் அதற்குக் காரணமான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பைடன் தலைமையிலான அரசாங்கம் உறுதி அளித்தது.

குறிப்புச் சொற்கள்
விபத்து