ராணுவ அதிகாரிகளை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்

1 mins read
a15eabc1-0204-4931-93a5-4af63bd010a3
ராணுவ அதிகாரிகளை சுட்டுக் கொன்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை ராணுவ வீரர்கள் செப்.14ஆம் தேதி மாலை சுற்றிவளைத்தனர். - படம்: தினத்தந்தி

காஷ்மீர்: காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் இரு நாள்களுக்குமுன் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ராணுவ வீரர்கள் நால்வர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

இந்நிலையில் ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரை, ராணுவ வீரர்கள் செப்.14ஆம் தேதி மாலை சுற்றிவளைத்தனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஜம்மு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

குறிப்புச் சொற்கள்