இண்டியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து

இண்டியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து

1 mins read
f9061d1a-1437-4cdb-ae9d-866ed72e65be
கமல்நாத். - படம்: ஊடகம்

போபால்: இண்டியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இக்கூட்டம் மத்திய பிரதேசத்தில் நடைபெற இருந்தது.

இதனால் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இண்டியா கூட்டணியை அமைத்துள்ளன.

இக்கூட்டணிக்காக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அது தற்போது ரத்தாகிவிட்டது. எனினும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்