தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்றுவிக்கும் பள்ளி ஆசிரியை

2 mins read
f5670820-6e54-48b6-acdb-93c52875e4c8
பெண்கள் அச்சத்தில் வாழக்கூடாது என்பதற்காக தற்காப்புக் கலை பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஆஷா சுமன். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையம்

புதுடெல்லி: ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை ஒரு சிறப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இளம்பெண்களுக்கு அவர் தற்காப்புக் கலை கற்பித்து வருகிறார்.

பெண்கள் ஒருபோதும் அச்சத்தில் வாழக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் கலையை அவர் கற்றுக் கொடுக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வாரில் உள்ள கர்காரா அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த ஆஷா சுமன், இதுவரை பார்வையற்ற, அல்லது பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுமிகள் உட்பட ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு தற்காப்பு நுட்பங்களை கற்பித்துள்ளார்.

அண்மைய ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த சிறப்பு விழாவில் ஆசிரியர்களுக்கான மதிப்புமிக்க தேசிய விருதை வழங்கி ஆஷாவை இந்திய அதிபர் கௌரவித்தார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பிற்காக நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கல்வியாளர்களில் இவரும் ஒருவர்.

ஆஷாவின் முயற்சிகள் பாடத்திட்ட மேம்பாடு, சமூக நலன் மற்றும் பெண்கள் திறனை உயர்த்துவது ஆகியவற்றில் தொடர்ந்து வருகிறது.

பெண்கள் முன்னேற்றத்திற்காக 50,000க்கும் மேற்பட்ட பெண்களுடன் நேரடியாக உரையாடி 3,000 சிறுமிகளுக்கு தற்காப்புப் பயிற்சியை அளித்துள்ளார்.

ஊனமுற்றோர் மற்றும் காது கேளாத, வாய் பேச முடியாத பெண்களுக்கும் பயிற்சி அளிப்பதில் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அவரது குறிப்பிடத்தக்க பங்கையாற்றியுள்ளார்.

தற்போது, ​​அவர், 250 காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமிகளுக்கு தற்காப்பு மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சி அளித்து வருகிறார். மேலும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள், இல்லத்தரசிகள் உட்பட ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்