இந்தியாவில் பெண்களை ஊழியரணிக்கு ஈர்க்க அனைத்துலக வங்கிகள் முயற்சி

இந்தியாவில் பெண்களை ஊழியரணிக்கு ஈர்க்க அனைத்துலக வங்கிகள் முயற்சி

1 mins read
884b4270-09df-41ea-bcb0-bab129f7a58e
வங்கியாளர்களின் செவிலித் தாய்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை எச்எஸ்பிசி வங்கி கட்டணம் செலுத்துகிறது. - படம்: புளூம்பெர்க்
Google News Preferred Icon

மும்பை: இந்தியாவின் பல பகுதிகளில் பெண் ஊழியர்களை ஊழியரணிக்கு ஈர்த்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஒரு பகுதியாக, அனைத்துலக நிதி நிறுவனங்கள் மகப்பேறு அனுகூலங்களை விரிவுபடுத்தி வருகின்றன.

வங்கியாளர்களின் செவிலித் தாய்களுக்கு ஆறு ஆண்டுகள் வரை எச்எஸ்பிசி வங்கி கட்டணம் செலுத்துகிறது. கர்ப்பிணி ஊழியர்கள் டாக்சி வேலைக்கு வந்துசெல்வதற்கான கட்டணத்தை மோர்கன் ஸ்டேன்லி வங்கி ஏற்கிறது.

இந்தியாவில் கால்வாசிக்கும் குறைவான பெண்களே வேலைக்குச் செல்கின்றனர். இது, உலகிலேயே ஆகக் குறைவான விகிதமாகும்.

“பெண்களின் பங்கேற்பு இன்றி இந்தியாவால் வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலையை எட்ட முடியாது,” என்று சிட்டி இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைமை மனிதவள அதிகாரி ஆதித்யா மிட்டல் தெரிவித்தார்.

சம்பளத்துடன் கூடிய விடுப்பு முடிந்தவுடன் ஓராண்டு வரை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தெரிவு புதிய தாய்மார்களுக்கு இனி வழங்கப்படும் என்று சிட்டி வங்கி கடந்த வாரம் அறிவித்திருந்தது.

பெண்களுக்கான வேலைப் பயிற்சித் திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம் 2021ல் தொடங்கியது. வீட்டிற்கு வெளியே வேலை செய்யுமாறு பெண்களை ஊக்குவிக்க நீக்குபோக்கு வேலை நேரத்தைக் கடைப்பிடிப்பது ஒரு சிறந்த வழி என்று கடந்த ஆண்டு அரசாங்கம் கூறியிருந்தது.

இந்தியாவில் திறனாளர்களை ஈர்க்கும் வேட்கையில் வங்கிகள் உள்ளன. அமெரிக்கா-சீனா பதற்றநிலை தொடரும் வேளையில், பல அனைத்துலக வங்கிகளின் கவனம் தற்சமயம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்