தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகர் மோகன்லாலை சந்திக்க ஆசை: விருப்பம் நிறைவேறாமலேயே 108 வயது மூதாட்டி மரணம்

2 mins read
c0c41ec4-ed6f-4a1c-b5f7-190da390858c
நடிகர் மோகன்லாலை சந்திக்க விரும்பிய 108 வயது தனது ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்துவிட்டார். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சுன்னாம் புத்தாரா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மாதவியம்மா என்ற 108 வயது மூதாட்டி முதியோர் இல்லத்தில் வசிக்கிறார்.

மூதாட்டி மாதவியம்மா நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் நடித்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கண் இமைக்கால் ரசித்து பார்க்கும் பாட்டி நடிகர் மோகன்லாலை எப்படியாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.

மூதாட்டி தங்கியிருந்த முதியோர் இல்லத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. அதில் ஷாபி பரம்பி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மூதாட்டி மாதவியம்மா தன் ஆசையை அந்த எம்எல்ஏயிடம் தெரிவித்தார்.

அந்த எம்எல்ஏ அதனைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதன் மூலம் மூதாட்டி மாதவியம்மா வெளி உலகத்திற்குத் தெரிய வந்தார். பரவலாக சமூக வலைத்தளங்களிலும் இடம் பிடித்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டுக்கு திரைப்பட படப்பிடிப்பிற்காக நடிகர் மோகன்லால் வந்திருந்தார்.

அப்போது அவர் மூதாட்டி மாதவியம்மாவை நேரில் சந்திப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மூதாட்டியை மோகன்லால் சந்திக்கவில்லை. படப்பிடிப்புத் தளத்திற்கு மூதாட்டியை அழைத்து செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் மூதாட்டி மாதவியம்மா வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். நடிகர் மோகன்லாலை சந்திக்கும் அவரது கனவு கடைசி வரை நனவாகாமல் சென்று விட்டதே என்று அவரின் இல்லவாசிகள் கவலை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்