யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் ஹொய்சாலா கோவில்கள்

யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் ஹொய்சாலா கோவில்கள்

1 mins read
3df2472e-4fcb-4a9a-b430-6431881d017b
யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் ஹொய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு இருப்பது, இந்தியாவுக்கு மேலும் அதிக பெருமை அளிப்பதாக உள்ளது என்று இந்தியப் பிரதமர் பிரதமர் மோடி தெரிவித்தார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: உலக பாரம்பரியப் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஹொய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் பேலூர், ஹளபேடு, சோமநாத்புரம் ஆகியவற்றின் ஹொய்சாலா கோவில்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இதனால் இந்தியாவில் உள்ள மொத்தம் 42 தலங்கள் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலங்கள் என்ற நிலையை எட்டி உள்ளன.

யுனெஸ்கோ எக்ஸ் தளத்தில் இது தொடர்பான தகவலைத் தெரிவித்து உள்ளது.

“இந்தியாவில் உள்ள ஹொய்சாலா கோவில்கள் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன, வாழ்த்துகள்,” என அது தெரிவித்துள்ளது.

இதனிடையே, யுனெஸ்கோவின் அந்த அறிவிப்பை எக்ஸ் சமூக ஊடகத்தில் வரவேற்றுள்ள இந்தியப் பிரதமர் பிரதமர் மோடி இந்தியாவுக்கு மேலும் அதிக பெருமை கிடைத்துள்ளது என்றார்.

“யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் பிரமிக்கச் செய்யும் புனிதத் தோற்றம் கொண்ட ஹொய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

“அழகுநிறைந்த, சிக்கலான கலை அம்சங்களைக் கொண்ட ஹொய்சாலா கோவில்கள் இந்தியாவின் கலாசார பாரம்பரிய செறிவுக்கான தக்க சான்றாக உள்ளன.

“நம் முன்னோர்களின் தனிச்சிறப்புடனான கைவினைத் திறனை அவை விளக்குகின்றன,” என்று மோடி தெரிவித்துள்ளார்.

அண்மையில் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டது

குறிப்புச் சொற்கள்