‘சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த வயது வரம்பு தேவை’

‘சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த வயது வரம்பு தேவை’

1 mins read
c50ac548-f89f-4e85-941b-a39199461c6a
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரைத்து இருக்கிறது. - படம்: இந்திய ஊடகம் 

பெங்களூரு: சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயம் செய்யும்படி கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது.

இளைஞர்கள் குறிப்பாக சிறார்கள் சமூக ஊடகங்களை அணுக முடியாமல் தடையிருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு விசாரணையின்போது நீதிமன்றம் குறிப்பிட்டது.

வாக்களிக்க தகுதி பெற வயது 21 அல்லது 18 ஆக இருக்க வேண்டும் என்று வரம்பு நடப்பில் இருப்பதைப் போல சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தவும் வயது வரம்பு வேண்டுமென்று அது தெரிவித்தது.

எக்ஸ் இணையத்தளம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக இருக்கும் குழந்தைகள் தாமதமாகப் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

குறிப்புச் சொற்கள்