லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் ரூ.3,100 கடனைச் செலுத்தாத காய்கறி வியாபாரியை அடித்து அவரை சந்தையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரவலாக அதிர்ச்சியைக் கிளப்பிவிட்டு இருக்கிறது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.
சம்பந்தப்பட்ட காய்கறி வியாபாரியின் பெயர் குறிப்பிடப்பவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிகாரிகள் அந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் மைன்பூரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த வியாபாரி, லக்னோவில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
அவர் ஒரு முகவரிடம் ரூ.5,600 கடன் வாங்கி பூண்டு விற்பனை செய்யும் வண்டியுடன் பிழைப்பு நடத்தி வருகிறார்.
அவர் தான் வாங்கிய கடனில் ரூ.2,500 தொகையைச் செலுத்த சென்ற போது பணத்தைக் கடன் கொடுத்தவர் தன்னுடைய கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு தன்னை தாக்கியதாகவும் ஆடைகளைக் களைந்து சந்தையில் தன்னை நிர்வாணமாக இழுத்துச் சென்றதாகவும் அந்த வியாபாரி காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருக்கிறார்.
இது பற்றி கருத்து கூறிய அதிகாரிகள் சுந்தர் சிங், பகந்தாஸ் சிங் ஆகிய இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டு இருப்பதாகவும் இதர சிலர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களைத் தாங்கள் தேடி வருவதாக காவல்துறை தெரிவித்தது.


