தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

26 விரல்களுடன் குழந்தை: அவதாரம் என மகிழ்ச்சி

1 mins read
b177e163-1c7e-4e61-b2bd-11a4d7cfc351
26 விரல்களுடன் பிறந்து இருக்கும் குழந்தையை தங்களின் குடும்ப தெய்வத்தின் அவதாரம் என்று போற்றி ராஜஸ்தான் குடும்பத்தினர் மகிழ்கிறார்கள். - படம்: இந்திய ஊடகம் 

பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் குழந்தை ஒன்று 25 விரல்களுடன் பிறந்து இருக்கிறது.

அந்தக் குழந்தை தெய்வத்தின் அவதாரம் என்று குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அந்தக் குழந்தையின் ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்கள், ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்கள் இருக்கின்றன.

அந்தப் பெண் குழந்தை தோலகர் தேவி என்ற தெய்வத்தின் அவதாரம் என்று அந்தக் குடும்பத்தினர் கருதுகிறார்கள்.

ஆனால், மரபணு கோளாறு காரணமாக குழந்தை அதிக விரல்களுடன் பிறந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருந்தாலும் 26 விரல்களுடன் குழந்தைப் பிறப்பது மிகவும் அரிது என்ற மருத்துவர்கள், விரல்கள் இந்த அளவுக்கு அதிகமாக இருப்பதால் குழந்தையின் உடல்நலத்தில் பாதிப்பு இருக்காது என்று கூறினர்.

குழந்தையைப் பரிசோதித்த பி.எஸ். சோனி என்ற மருத்துவர், அந்தப் பெண் குழந்தை இப்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறது என்றும் அதிக விரல்கள் இருப்பதால் உடல் நலத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
குழந்தை