தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெருநாய் கடி: நாள்தோறும் 20 சிறுவர்கள் பாதிப்பு

1 mins read
205e97c2-1f3f-43e2-a2ba-8c60e9c453a4
தெரு நாய்கள் கடித்த பல சிறுவர்கள் கடுமையாகக் காயமடைந்தனர். - படம்: தமிழ் முரசு

புதுடெல்லி: கேரள மாநிலத்தின் கன்னூர் மாவட்டத்தில் நாள்தோறும் 30 சிறுவர்களைத் தெரு நாய்கள் கடிப்பதாக அந்நகரத்தின் கிராமப் பஞ்சாயத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வண்ணம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் அது மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 465 சிறுவர்களைத் தெரு நாய்கள் கடித்ததாக கன்னூர் கிராமப் பஞ்சாயத்து சமர்ப்பித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னூர் கிராமப் பஞ்சாயத்துக்குக்கீழ் உள்ள வட்டாரங்களில் 23,666 தெரு நாய்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்கள் கடித்த பல சிறுவர்கள் மிகக் கடுமையாகக் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தெரு நாய்கள் கடித்து 11 வயது சிறுவன் ஒருவன் மாண்டதாகவும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்