தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிறுத்தைகளைத் தொடர்ந்து 13 மான்கள் மடிந்தன

1 mins read
103df028-ef99-4efc-8590-199d7c693195
மான்களின் இறப்பு பூங்காவின் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. - படம்: தமிழ் முரசு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் அண்மையில் அடுத்தடுத்து ஏழு சிறுத்தைக் குட்டிகள் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில், தற்போது திடீரென்று 13 மான்கள் மடிந்துவிட்டன.

இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பூங்தாவில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், நரி உட்பட பல்வேறு விலங்குகள் உள்ளன.

மாண்ட சிறுத்தைக் குட்டிகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில் பூனை வாயிலாகப் பரவும் ஒருவகை கிருமித்தொற்றால் அவை பாதிக்கப்பட்டு மடிந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பெங்களூரு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் வளர்க்கப்பட்டு வந்த 37 மான்கள் பன்னரகட்டா உயிரியல் பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அனை தனி இடத்தில் பராமரிக்கப்பட்டன.

அவற்றில் 13 மான்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இது அதிகாரிகளையும் பூங்காவின் ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எஞ்சியுள்ள மான்களை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மான்களுக்குச் சத்துள்ள உணவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்