தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லி ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கினார் ராகுல் காந்தி

1 mins read
6c991f8b-b591-4241-8ba8-89e52a20ec5c
தலையில் பெட்டியைச் சுமந்து சென்ற ராகுல் காந்தி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: புதுடெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பெட்டி தூக்கும் தொழிலாளர்களுடன் இணைந்து பெட்டி தூக்கினார். தொழிலாளர்களைப் போலவே சிவப்பு நிற சீருடையை அவர் அணிந்திருந்தார். அவர்களைப் போல கையில் ஊழியர் எண் பட்டையைக் கட்டிக்கொண்டு தலையில் பெட்டியைச் சுமந்து சென்றார்.

இதுதொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

ராகுல் காந்தி அவ்வப்போது மக்களுடன் மக்களாக இருந்து அவர்களது பணிகளை செய்வதுடன், அவர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு அவர் லாரி ஓட்டுநர்களுடன் இணைந்து பயணம் செய்து கலந்துரையாடினார்.

பின்னர் தமிழகம் வந்த ராகுல் காந்தி, ஊட்டியில் தோடர் மக்களுடன் இணைந்து அவர்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.

குறிப்புச் சொற்கள்