டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
4014f58f-00d2-42ce-b0ef-bc85578a260e
வெடிகுண்டு இல்லை என்று அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதும் பள்ளி நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு அதிகாரிகள் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ஆனால் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளியில் தேர்வு நடத்தப்பட இருந்ததாகப் பள்ளி நிர்வாகம் கூறியது,

இந்நிலையில், வளாகத்தில் வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்டதும் பள்ளி வழக்கம்போல செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

போலி மின்னஞ்சல் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்