ஒரே நேரத்தில் 14 மாணவிகள் கைகளை வெட்டிக்கொண்ட சம்பவம்; விசாரணை

ஒரே நேரத்தில் 14 மாணவிகள் கைகளை வெட்டிக்கொண்ட சம்பவம்; விசாரணை

2 mins read
cde07386-0821-444d-9822-33b537f23518
கர்நாடகாவில் ஒரு தனியார் பள்ளியின் 9, 10ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 14 மாணவிகள் தங்கள் இடது கைகளை ஒரே நேரத்தில் வெட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. - படம்: தமிழக ஊடகம்

பெங்களூரு: கர்நாடகாவின் கார்வார் மாவட்டம் தண்டேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 9, 10ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 14 மாணவிகள் சனிக்கிழமையன்று தங்கள் இடது கைகளை ஒரே நேரத்தில் வெட்டிக்கொண்டனர்.

அவர்கள் வீடு திரும்பியபோது அதைப் பார்த்த பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்து அது சம்பந்தமாக ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பேசினர். அதை கேட்ட ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சி அடைந்தனர்.

இப்படி கூட்டாகக் கைகளை வெட்டிக் கொண்டதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டறிய மாவட்ட ஆட்சியர் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இடது கை மணிக்கட்டு பகுதியில் பிளேடால் வெட்டிக் கொண்ட மாணவிகளில் சிலருக்கு – 15 காயங்கள் இருந்தன.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைகளை வெட்டிக் கொண்ட சிறுமிகளுக்கு உயிர் பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

சிறுமிகளுக்கு உளவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அப்போது பெரும்பாலானோர் உண்மையை தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஓரிரண்டு மாணவிகள் மட்டுமே சில விவரங்களைக் கூறினர்.

தன் தாயை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக குற்ற உணர்ச்சியால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக ஒரு பெண் கூறினார்.

மற்றொரு பெண் தனது மாமாவின் அண்மைய மரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் கைகளை வெட்டிக் கொண்டதாகத் தெரிவித்தார்.

தோழி தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக மற்றொரு பெண் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் ஒரே நேரத்தில் 14 சிறுமிகளும் இந்தக் காரியத்தில் ஈடுபட்டு இருப்பது பல சந்தேகங்களை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்