கடனைத் திருப்பித் தராதவர்களுக்கு சாக்லெட்

கடனைத் திருப்பித் தராதவர்களுக்கு சாக்லெட்

1 mins read
5f2715ac-705f-4a49-856c-b00aecb3207e
கடனை வசூலிக்க வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் சாக்லெட்டுடன் செல்வர். - படம்: தமிழ் முரசு

புதுடெல்லி: கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லுத்துக்குச் சென்று சாக்லெட் தரும் மிக வித்தியாசமான அணுகுமுறையை இந்தியாவின் பாரத் ஸ்டேட் வங்கி நடைமுறைப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மேல்விவரங்களை வழங்கியுள்ளது.

வங்கியிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பின்னரும் அதற்கான தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தவில்லை என்றால் அவர்களுடன் வங்கி தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொலைபேசி அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புறக்கணித்தால் கடனை அடைக்க அவர்களுக்கு எண்ணம் இல்லை என்று எடுத்துக்கொள்ளப்படும் என்று வங்கி கூறியது.

எனவே, அவர்களிடமிருந்து கடன் தொகையை வசூலிப்பதற்கு அவர்களது வீட்டிற்கு அல்லது அலுவலகத்துக்கு அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி அனுப்பப்படுவர் என்றும் இனி சாக்லெட்டுகளுடன் அதிகாரிகள் அனுப்பப்படுவர் என்றும் வங்கி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்