திருவனந்தபுரம்: கடந்த 38 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு திருமணத்தில் தலையிட்டு அதைக் கலைத்துவிடுவது என்று கேரள உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கணவன்-மனைவிக்கு இடையில் இனிமேல் குடும்ப வாழ்க்கை இயலாத ஒன்று என்பது திட்வட்டமாகத் தெரியவந்துவிட்ட நிலையில் அந்தத் திருமணத்தை நீடிப்பத்தில் எந்தப் பொருளும் இல்லை.
அத்தகைய ஒரு திருமண வாழ்க்கை தொடர்ந்தால் இருவருமே சொல்லமுடியாத அளவுக்கு மனச் சிரமங்களை அனுபவிப்பார்கள் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
முதியவர் ஒருவர் குடும்ப நீதிமன்றத்தில் மணவிலக்கு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
தனது மனைவியும் தன் இரண்டு பிள்ளைகளும் தன்னை உதாசீனப்படுத்தி ஒதுக்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி மறுத்தார்.
மனுவை விசாரித்த குடும்ப நீதிமன்றம் மணவிலக்கு தர இயலாது என்று அறிவித்தது. அதை எதிர்த்து அந்த முதியவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அந்த கணவருக்குச் சாதகமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து அவரின் திருமணத்திற்கு முடிவு கட்டியது.

