தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.3.5 கோடியில் சொகுசு கார் வாங்கிய டாப்சி

1 mins read
f4737b5f-38c1-4524-bddf-22041b8dedb5
டாப்சி தன் காருடன். - படம்: ஊடகம்

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானாலும் இன்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் டாப்சி.

சினிமாவில் நடிப்பதோடு நடிகை கங்கனா ரணாவத் போலவே நாட்டு நடப்புகள் குறித்தும் தனது கருத்துகளை பகிரங்கமாக அவ்வப்போது சமூக ஊடகங்கள் வழி பேசி வருபவர்.

தன் தங்கையுடன் இணைந்து ‘வெட்டிங் பிளானர்’ உள்ளிட்ட பல தொழில்களையும் நடத்தி வருகிறார். சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களும் தயாரித்து வருகிறார்.

தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானுடன் ‘டன்கி’, தமிழில் ‘ஏலியன்’ ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், ரூ.3.5 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் மெபேக் ஜிஎல்எஸ் மாடல் சொகுசு காரை வாங்கியுள்ள டாப்சிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் சொல்லி வருகின்றனர்.

டாப்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகைகள் கோடிக் கணக்கில் செலவு செய்து சொகுசு கார் வாங்குவதை கிண்டல் செய்திருந்தார். அதைத் தற்போது நினைவுபடுத்தி டாப்சியைக் கிண்டல் செய்து வருகின்றனர் ஒரு சில வலைவாசிகள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்