ரூ.29 லட்சம் தங்கம் கடத்திய மாது கைது

ரூ.29 லட்சம் தங்கம் கடத்திய மாது கைது

1 mins read
0abe43ed-0e78-4d36-bd27-c7f9e1eca307
மாதவிடாய்க்கால அணையாடையில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார். - படம்: இந்திய ஊடகம் 

திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு வந்த விமானத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மாதவிடாய்க்கால அணையாடையில் (சானிட்டரி நாப்கின்) மறைத்து வைத்திருந்தார்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அந்தப் பெண்மணி வசமாகச் சிக்கினார்.

அவரிடம் இருந்து 679 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது பற்றி தகவல் தெரிவித்த அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமான முறையில் செயல்பட்ட அந்த மாது, சரசரவென விமான நிலையத்தைவிட்டு வெளியேற முயன்றதாகவும் ஆனால், அதிகாரிகள் தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

அந்த மாது திருப்பூரைச் சேர்ந்தவர். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கடத்தல்