தெலுங்கானா: தெலுங்கானாவில் அங்கன்வாடி ஊழியர்களிடம் அகப்பட்டுக்கொண்ட பெண் காவல் அதிகாரி அனைவரையும் சமாளித்து ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கினார்.
தெலுங்கானாவில் அடிலாபாத் மாவட்டத்தில் பல அம்சங்களை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தங்களுக்கு மாத வருமானம் ரூ.26,000 வேண்டும் என்று கேட்டு அவர்கள் ஆட்சியர் அலுவலகங்களில் கூடி போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த நிலையில், அடிலாபாட் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் பெரும்பிரச்சினையாக உருவெடுத்தது.
அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய போராட்டக்காரர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரி, ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க முயன்றார்.
அப்போது ஆர்ப்பாட்டாக்காரர்கள் அந்த அதிகாரியின் தலைமுடியைப் பிடித்து அவரை தரதரவென இழுத்துச் சென்றனர்.
இருந்தாலும், அந்த அதிகாரி சுதாரித்துக்கொண்டு அனைவரையும் எதிர்த்து நின்று தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு மற்ற அதிகாரிகளின் உதவியுடன் போராட்டக்காரர்களை ஒடுக்கி அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டார்.

