மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் ஜோகேஸ்வரி என்ற பகுதியில் செயல்படும் பிரபல ஹீரா பன்னா என்ற கடைத்தொகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் பெரியளவில் தீ மூண்டதாக மாநகர கழகம் அறிவித்தது.
அந்தக் கட்டடத்திற்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. ஆனால், அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் உயிருடற்சேதம் எதுவும் இல்லை என்றும் வெள்ளிக்கிழமை மாலையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கடைத்தொகுதியின் மூன்றாவது மாடியில் தீ மூண்டதாக மும்பை தீயணைப்புத் துறை கூறியது.
12 தீயணைப்பு வண்டிகள் உள்ளிட்ட மொத்தம் 25 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு தீயைக் கட்டுப்படுத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.