தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டு மாடி வீடு சரிந்துமூன்று குழந்தைகள் பலி

1 mins read
e0c4a41e-18f8-438f-8878-56770a8871f1
வீட்டில் வாடகைக்கு இருந்தவர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாகவும் அதுவே விபத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

காசியாபாத்: உத்திரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி என்ற பகுதியில் இருந்த இரண்டு மாடி வீட்டுக் கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர்.

இதர ஏழு பேர் காயமடைந்தனர். வீட்டில் வாடகைக்கு இருந்தவர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அதனால் விபத்து நிகழ்ந்து வீடு இடிந்து விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரை மீட்டனர்.

அந்த ஏழு பேரும் கடுமையாக காயமடைந்து இருந்ததாக காவல் துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
விபத்து