சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரயில் சேவை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ரயில் சேவை

1 mins read
401f0ce6-0e07-4c36-9202-9757f383663d
செங்கனூரில் இருந்து பம்பா வரை அமைக்கப்படும் ரயில்பாதையில் மெட்ரோ ரெயிலை இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.  - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூசை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் விரதமிருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதேபோல் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் நடக்கும் மாதாந்திர பூஜையின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், சபரிமலைக்கு மெட்ரோ ரெயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளை மாநில அரசும் இந்திய ரயில்வே துறையும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

செங்கனூரில் இருந்து பம்பா வரை அமைக்கப்படும் ரயில்பாதையில் மெட்ரோ ரயிலை இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சபரிமலை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ரூ.9ஆயிரம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.