மோடி சொன்னால் நிறுத்துகிறேன்: சாலையில் வீரம் பேசிய பெண்

மோடி சொன்னால் நிறுத்துகிறேன்: சாலையில் வீரம் பேசிய பெண்

1 mins read
a67e7c3b-05bc-44af-aaca-da8c5817ddae
அதிவேகமாக புல்லட்டில் வந்த பெண்ணை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். - படம்: இந்தியா டுடே

பாதுகாவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டி, தள்ளியதாக மும்பையில் மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பந்த்ரா-வொர்லி சீ லிங்க் சாலையில் அதிவேகமாக மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்த அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அவர், அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளிகள் காட்டுகின்றன.

அந்தப் பெண் மோட்டார்சைக்கிளிலிருந்து இறங்க மறுத்துவிட்டார். அதில் உட்கார்ந்தபடியே அதிகாரிகளிடம் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“நரேந்திர மோடி என்னை அழைத்தால், அவர் என்னிடம் நிறுத்தச் சொன்னால் வாகனத்தை நிறுத்துகிறேன்,” என்றும் அவர் வீர வசனம் பேசினார்.

அவரை அதிகாரிகள் வெளியே வரவழைக்க முயற்சி செய்தபோது இந்தியில் ‘கைகளை வெட்டி விடுவேன், என்னுடைய மோட்டார்சைக்கிளைத் தொடுவதற்கு என்ன தைரியம்” என்று மிரட்டும் தொணியில் பேசினார்.

இந்த நிலையில் தெற்கு மும்பையை நோக்கி தனது புல்லட்டில் சென்ற நிபுர் முகேஷ் பட்டேல் என அடையாளம் காணப்பட்ட பெண் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளதாக பந்த்ரா-வொர்லி சீ லிங்க் சாலையின் பாதுகாவல் அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

இதற்கிடையே தேவையில்லாத வாக்குவாதத்தில் அந்தப் பெண் ஈடுபட்டதாக அவ்வழியாகச் சென்ற அரசாங்க ஊழியர் ஒருவர் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த பட்டேல், சொத்துநிறுவனத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட புல்லட் வாகனத்தில் பயணம் செய்துள்ளார். நீதிமன்றத்தில் முன்னிலையாக அவருக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்