மும்பை: கத்திமுனையில் 16 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை

மும்பை: கத்திமுனையில் 16 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை

தமிழ் முரசு

26 Sep 2023 - 4:13 pm

1 mins read

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையிலுள்ள முல்லுண்டுப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி ஒருவர் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது ஆடவர், நண்பருடன் சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்தார்.

அந்தச் சிறுமியை அவர்கள் கத்திமுனையில் மிரட்டி ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பியோடினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த அந்தச் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் சில மணி நேரங்களில் ஒரு இளையரைக் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது நண்பனைத் தேடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்