கேரளாவில் 5.4 கிலோ தங்கம் பறிமுதல்

1 mins read
5ea9b0ca-19d9-4bc2-a551-6c5abb1b2bc7
கேரள மாநிலத்தின் கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுங்கத் துறை மேற்கொண்ட சோதனையில் 5.4 கிலோ தங்கம் பிடிபட்டது. - கோப்புப்படம்: ஊடகம்

கோழிக்கோடு: கேரளாவின் கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாள்களில் நடந்த சுங்கத்துறை சோதனையில் 6 பயணிகளிடம் இருந்து கிட்டத்தட்ட 5.4 கிலோ எடையுள்ள தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரியாத்தில் இருந்து வந்த முகம்மது பஷீர், துபாயில் இருந்து வந்த முகம்மது மிட்லஜ்,தோகாவில் இருந்து வந்த ஸ்ரீ லிங்கேஷ், அஜீஸ் ஆகியோர் கிட்டத்தட்ட 970 கிராம் எடையுள்ள தங்கத்தை பசை வடிவில் கொண்டு வந்திருந்தனர்.

அத்துடன் மேலும் இரண்டு பயணிகளிடம் இருந்தும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ரூ.3.4 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்