ஒரே நாளில் 12 பேர் நீரில் மூழ்கி மரணம்

ஒரே நாளில் 12 பேர் நீரில் மூழ்கி மரணம்

1 mins read
95c4e058-0d93-4d0a-9c45-68a3199f44f6
பீகாரில் உள்ள ஆறு மாவட்டங்களில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 12 பேர் ஆற்று நீர் மற்றும் கால்வாய் நீரில் தவறி விழுந்து உயிரிழந்தனர். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். அந்த மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் இச்சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்தது.

கயா, அர்வால் ஆகிய மாவட்டங்களில் தலா மூவரும் தர்பங்காவில் இருவரும் அவுரங்காபாத், சமஸ்திபூர், சுபால் மற்றும் ஜமுய் மாவட்டங்களில் தலா ஒருவரும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.

கயாவில் மாண்ட மூவரில் இருவர் 2 சிறுமியர். சங்கம் குமாரி, 13, ரதிம் குமாரி, 10, ஆகிய இருவரும் சகோதரிகள். படவுரா என்னுமிடத்தில் கால்வாய் அருகே விறகு கொண்டுவரச் சென்ற இச்சிறுமியர் கால்வாய் நீரில் மூழ்கினர்.

தத்தளித்த அவர்களை காப்பற்ற முயன்ற ரஹிம் என்பவரும் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.

அதேபோல அர்வாலில் நீருக்குள் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களும் இரட்டையர்.

குறிப்புச் சொற்கள்
விபத்து