தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு

1 mins read
aa4f7f6d-69dd-4501-92ac-b0ebcb635a42
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை ஐந்து மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்கின்றனர்.

அப்போது ஐந்து மாநிலங்களின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர்கள், ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணத்திற்கு பிறகு தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்த வாரம் ஐந்து மாநிலங்ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. மற்ற கட்சிகளை விட பாஜக இதில் வேகமாக செயல்படுகிறது

பிரதமர் மோடி தெலுங்கானாவில் இரண்டு நாட்கள் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்