தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பச்சோந்தி சேலை: விலை ரூ.2.80 லட்சம்

1 mins read
e3d33af5-4f21-4043-928c-d5dad96616c2
ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலையைத் தயாரிக்க கேட்டுக்கொண்டதன் பேரில் அத்தகைய சேலையை நல்ல விஜய் என்ற சேலை வல்லுநர் தயாரித்துள்ளார். - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நல்ல விஜய் என்பவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார்.

இவர் மூலிகைகளை பயன்படுத்தி மணம் வீசக்கூடிய சேலைகளை முன்பு தயாரித்தார். ஊசி முனையில் நுழையக்கூடிய புடவை ஒன்றையும் உருவாக்கி சாதனை படைத்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரிடம் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை செய்ய அணுகினார். இதனை தொடர்ந்து விஜய் ரூ.2.80 லட்சம் செலவில் நிறம் மாறக்கூடிய சேலை ஒன்றை தயாரித்தார்.

இந்த சேலையை தயாரிக்க 30 கிராம் தங்கம் மற்றும் 500 கிராம் வெள்ளியை உருக்கி கலவையாக சேர்த்துள்ளார். பகல், இரவு மற்றும் மின் வெளிச்சத்திற்கு ஏற்றபடி இந்தப் புடவை 3 விதமான நிறங்களில் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் என நல்ல விஜய் தெரிவித்தார்.

பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலையை தொழிலதிபர் ரூ.2.80 லட்சம் கொடுத்து பெற்றுக் கொண்டார். விஜய் தற்போது ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு சேலையை நெசவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்