செல்லப் பிராணியுடன் நடைபயில திடலைக் காலிசெய்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கட்டாய ஓய்வு

செல்லப் பிராணியுடன் நடைபயில திடலைக் காலிசெய்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கட்டாய ஓய்வு

1 mins read
3f95a993-e764-46e6-80e2-6fd3cd02a763
படம்: - ஊடகம்

புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகளான கணவனும் மனைவியும் டெல்லியில் உள்ள ஒரு விளையாட்டுத் திடலில் தங்கள் நாய்க்குட்டியை நடைபயில அழைத்துச் சென்றபோது இளையர்கள் சிலர் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு அவர்களது செல்லப் பிராணி பயப்படக்கூடாது என்பதற்காக அவர்களை அந்தத் திடலில் இருந்து வெளியேற்றினர். பின்னர் தங்கள் செல்லப் பிராணியுடன் அந்தத் திடலில் நடைபயின்றனர்.

இந்தப் பிரச்சினை குறித்து அந்த இளையர்கள் புகார் செய்ய, அதையடுத்து அந்தத் தம்பதியரில் கணவர் கிர்வார் கடந்தாண்டு டெல்லியில் இருந்து இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக் பகுதிக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மனைவி ஐஏஎஸ் அதிகாரியான ரிங்கு துக்காவுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரிங்குவின் பணிப் பதிவின் அடிப்படையில் பொதுநலன் கருதி கட்டாய ஓய்வுபெற வைப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.

குறிப்புச் சொற்கள்