நிபா தொற்று: கட்டுப்பாடுகள் நீக்கம்

நிபா தொற்று: கட்டுப்பாடுகள் நீக்கம்

1 mins read
5ede4dfe-3126-4f89-9452-d7511d10089c
கோழிக்கோட்டில் நிபா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா தொற்று அச்சத்தால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

தொற்று பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வசித்த பகுதியாக கண்டறியப்பட்ட 9 பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக யாருக்கும் புதிதாக நிபா தொற்றுப் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதையடுத்து அப்பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுக்கூட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது நிகழ்ச்சிகளுக்கு காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்