டெல்லி, மும்பை, பெங்களூரு-இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்கள்

டெல்லி, மும்பை, பெங்களூரு-இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்கள்

2 mins read
d8eec200-9581-4665-89ca-934d5310f825
சென்னை அனைத்துலக விமான நிலையம், 1.76 மில்லியன் பயணிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: கோப்புப்படம்

புதுடெல்லி: இந்தியாவில் உள்ளூர் விமானப் போக்குவரத்துத்துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.

உலக அளவிலும் விமானச் சந்தையில், வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

உலகிலேயே அதிக பயணிகளைக் கொண்டுள்ள மூன்றாவது மிகப்பெரும் நாடாகவும் இந்தியா இருந்து வருகிறது.

இந்தியாவுக்குள் 24 மணி நேரத்தில் சுமார் 400,000 பேர் விமானங்களில் பயணம் செய்கிறார்கள். நாள் ஒன்றுக்கு சுமார் 6,000 விமானங்கள் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை வேகமாகக் கூடி வருகிறது.

இந்நிலையில், இந்திய விமான நிலையங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் 5.8 மில்லியன் பயணிகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறது.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவா மகாராஜ் அனைத்துலக விமான நிலையம் 4.32 மில்லியன் பயணிகளுடன் இரண்டாம் இடத்திலும் பெங்களூருவின் கெம்பே கவுடா அனைத்துலக விமான நிலையம் 2.99 மில்லியன் பயணிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி விமான நிலையம் 2.04 மில்லியன் பயணிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை அனைத்துலக விமான நிலையம் 1.76 மில்லியன் பயணிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம், அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம், கொச்சின் விமான நிலையம், புனே விமான நிலையம், கோவா விமான நிலையம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்