கீரை விற்க ஆவ்டி காரில் சந்தைக்குச் செல்லும் இளம் விவசாயி

1 mins read
bfec2993-d7e6-470a-a856-1fd71ffab864
ஆவ்டி காரில் சந்தைக்கு வந்திறங்கிய சுஜித், சந்தையில் விற்பதற்காக காய்கறிகளை தோளில் சுமந்துச் செல்கிறார். - படம்: இந்திய ஊடகம்

தொழில்நுட்பப் புரட்சி கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழில்துறையையும் உருமாற்றிவரும் வேளையில், வேளாண் துறையும் அதற்கு விதிவிலக்கன்று.

விளைநிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளுக்குப் பொதுவாக அவ்வளவு வருமானம் கிடைப்பதில்லை என்று பரவலாகக் கருதப்படுகிறது.

ஆனால், காலம் மாறிவிட்டது. கரிம வேளாண்மை போன்ற துறைகளில் கூடுதலான இளையர்கள் கால்பதிக்கத் தொடங்கிவிட்டனர். அத்தகைய முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இளம் விவசாயியான சுஜித், சாலையோரச் சந்தையில் கீரை விற்க ஆவ்டி ஏ4 சொகுசு காரில் வந்திறங்கியபோது அங்கிருந்தவர்கள் திகைத்துப் பார்த்தனர்.

இன்ஸ்டகிராமில் பகிரப்பட்ட அக்காணொளி, வயலில் சுஜித் பயிரிடுவதையும் பின்னர் தமது ஆவ்டி காரில் அவர் சந்தைக்குச் செல்வதையும் அங்கு ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட கீரைகளை சந்தைக்குச் சுமந்துச் செல்வதையும் காட்டியது.

பிளாஸ்டிக் தாளை விரித்து அதில் கீரைகளை வைத்து சுஜித் விற்பதையும் காணொளி காட்டியது. காய்கறிகள் விற்றுத் தீர்ந்தவுடன் தமது காரில் சுஜித் சந்தையிலிருந்து புறப்படுகிறார்.

ஊடகத் தகவல்களின்படி, பயன்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ஆவ்டி காரை சுஜித் வாங்கியுள்ளார். புதிய ஆவ்டி ஏ4 கார், ரூ.44 லட்சம் முதல் ரூ.52 லட்சம் வரை விற்கப்படுகிறது.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்