டெல்லியின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு

1 mins read
31f2c646-46bc-4ac2-bf03-00915910d8e8
படம்: - இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

அதிர்வு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நில அதிர்வுகள் காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டது.

டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்துகுஷ் மலைப்குதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.

நேப்பாளத்தில் 25 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

முதலில் 4.6 ரிக்டர் அளவிலும் பின் 6.2 ரிக்டர் அளவிலும் நில நடுக்கங்கள் பதிவாகின.

அதன் பின்னர் மீண்டும் இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

மூன்றாவது நில நடுக்கம் 3.6 ரிக்டர் அளவிலும் நான்காவது 3.1 ரிக்டர் அளவிலும் பதிவாகின.

அருணாச்சலப் பிரதேசத்தில் பிற்பகல் 3.27 மணிக்கு 5.2 ரிக்ர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

உயிர் சேதம், பொருள் சேதம் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்