சோனியாவுக்கு ராகுல் தந்த பரிசு

சோனியாவுக்கு ராகுல் தந்த பரிசு

1 mins read
e613f4e7-e5e6-489c-9afd-beab171fc26d
நாய்க்குட்டியை ராகுல் காந்தி கோவாவில் வாங்கியதாகக் கூறப்பட்டது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தமது தாயார் சோனியாகாந்திக்கு நாய்க் குட்டி ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். அவர் நாய்க்குட்டி வழங்கும் காணொளியை அனைத்துலக விலங்குகள் தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. நூரி என்று பெயர் கொண்ட அந்த நாய்க்குட்டியை தமது தாயார் சோனியா காந்திக்கு ராகுல் காந்தி அறிமுகப்படுத்துகிறார் என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவுக்குச் சென்றிருந்தபோது நூரியை ராகுல் வாங்கி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்