தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தையை விற்க முயன்ற சிறுவன்

1 mins read
09b58743-78be-47df-bc71-d22284548a6f
தந்தையை விற்க முனைந்த சிறுவன் கையால் எழுதிய விளம்பரக் குறிப்பு. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் தந்தையிடம் சண்டையிட்ட சிறுவன் ஒருவன், சமாதானமாகாமல் செய்த செயல் இப்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

சிறுவனுக்கு வயது எட்டு. அப்பாவுக்கும் அவனுக்கும் சண்டை.

கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு சண்டை தீர்ந்ததாக நினைத்தார் தந்தை. ஆனால் சிறுவன் சமாதானமாகவில்லை.

தன்னிடம் சண்டையிட்ட அப்பாவை விற்றுவிட முடிவெடுத்தான். அதற்காக விளம்பரக் குறிப்பு ஒன்றைத் தயாரித்தான்.

இரண்டு லட்ச ரூபாய் தந்தால் அப்பாவை வாங்கிச் செல்லலாம் என்று கைப்பட எழுதினான். மேல்விவரங்களுக்கு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தும்படியும் அதில் குறிப்பிட்டான்.

அதைத் தன் வீட்டுச் சன்னலில் செருகி வைத்தான்.

குழந்தை தன் கோபத்தை வெளிப்படுத்திய விதத்தை அப்பா ரசிக்கவே செய்தார். அத்துடன் அதைப் படம் எடுத்து இணையத்திலும் பதிவிட்டார்.

நகைச்சுவையான பின்னூட்டங்களோடு பலரும் இதை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்