தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: ‘பேரழிவின் நினைவூட்டல்’

1 mins read
b65173c8-e1ba-4a60-b2cf-df724b45fe8d
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ். - கோப்புப்படம்

நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டது மிகப்பெரிய பேரழிவான பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நினைவூட்டலாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள் கடந்த சனிக்கிழமையுடன் புழக்கத்தில் இருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் காங்கிரஸ் அதை விமர்சித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ரூ.2000 நோட்டுகளைப் புழக்கத்தில் நீக்கி, அவற்றின் இரங்கலை நாடு அனுசரித்து வரும் வேளையில், இது 2016ஆம் ஆண்டு நவம்பா் 8ஆம் தேதி மத்திய அரசு மேற்கொண்ட மிகப்பெரிய பேரழிவான பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நினைவூட்டலாக இருக்கட்டும்.

தற்போது பயனற்ற இந்த நடவடிக்கை மூலம் வரி செலுத்துவோரின் பல ஆயிரம் கோடி ரூபாயை வீணடித்து, நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு வணிகங்களை அழித்த மோடி அரசு, அடுத்த தலைப்புச் செய்தியை வெற்றிகரமாக சமாளிப்பதை நோக்கி நகா்ந்துவிடும் என்று விமா்சித்துள்ளாா்.

குறிப்புச் சொற்கள்