கேரளாவில் தங்கம் கடத்தியவர் பிடிபட்டார்

1 mins read
a9df8a90-2d19-42fb-b05e-f55c2f40d195
கண்ணூர் அனைத்துலக விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கம். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக அக்டோபர் 7ஆம் தேதி தங்கம் கடத்தப்படவிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது காசர்கோடு பேக்கல் பகுதியைச் சேர்ந்த தம்ஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், தனியாக அழைத்துச் சென்று உடைமைகளை சோதனை செய்தனர்.

சோதனையில் அவர் தாள் பெட்டிக்குள் ஒட்டி வைத்து 973.5 கிராம் தங்கத்தைக் கடத்தியது தெரியவந்தது.

அதன் மதிப்பு ரூ.56 லட்சத்து 32 ஆயிரம் எனக் கூறப்பட்டது ($93,389)

அதனை மீட்ட காவல்துறையினர், தம்ஜித்தைக் கைது செய்தனர். அவர் அபுதாபியில் இருந்து தங்கத்தைக் கடத்தியதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்